search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் எதிர்ப்பு"

    உத்தரப்பிரதேசத்தில் நடக்கவுள்ள பக்தி சொற்பொழிவில் கலந்து கொள்ள விலை மாதர்களுக்கு அழைப்பு விடுத்த ஆன்மிகவாதிக்கு அயோத்தி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். #MorariBapu #Ayodhya
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றி வருபவர் மொராரி பாபு. இவர் அயோத்தி நகரில் நடைபெறவுள்ள தனது பக்தி சொற்பொழிவை கேட்க வருமாறு மும்பை காமாத்திபுரா பகுதியில் வசிக்கும் விலை மாதர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  

    மொராரி பாபுவின் இந்த அழைப்புக்கு அயோத்தி மக்கள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

    இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், புனிதமான அயோத்தி நகரில் விலை மாதர்களை அழைப்பதன் மூலம் மொராரி பாபு குழப்பம் விளைவிக்க முயல்கிறாரா? வேண்டுமானால், நக்சலைட்கள் மற்றும் விலை மாதர்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று அவர் சொற்பொழிவு ஆற்றலாமே என கண்டனம் தெரிவித்தனர்.

    உள்ளூர் இந்து அமைப்பின் தலைவரான பிரவீன் சர்மா, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு மொராரி பாபு மீது நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார். #MorariBapu #Ayodhya
    இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு பிறப்பித்த உத்தரவுக்கு 59 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். #Helmet
    இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அரசு உத்தரவு குறித்து, தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் ‘தந்தி டி.வி.’ கருத்து கேட்டது. இந்த கருத்துக்கணிப்பு 32 ஊர்களில் 182 பேரிடம் கேட்கப்பட்டது.



    கருத்துக்கணிப்பு முடிவுகள் வருமாறு:-

    கட்டாய ஹெல்மெட் குறித்த அரசின் உத்தரவு ஏற்புடையது என 41 சதவீதம் பேரும், ஏற்புடையதல்ல என 59 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

    அரசின் உத்தரவை ஏற்காததன் காரணம் என்ன என்ற கேள்விக்கு, பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் ஹெல்மெட் அணிய தேவை இல்லை என 24 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். பின் இருக்கையில் ஹெல்மெட் அணிந்து பயணிப்பது சிரமமாக உள்ளது என 67 சதவீதம் பேர் கருத்து கூறியிருக்கிறார்கள். பயணத்திற்கு பிறகு ஹெல்மெட்டை எடுத்துச் செல்வது கடினமாக உள்ளதாக 9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஹெல்மெட் தொடர்பாக அரசின் உத்தரவு குறித்து, காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்களா? என்ற கேள்விக்கு ஆம் என 95 சதவீதம் பேரும், இல்லை என 5 சதவீதம் பேரும் பதில் அளித்துள்ளனர்.

    இதுபோல, பல்வேறு இலவச பொருட்களை வழங்கும் அரசு, ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும் எனவும் ஹெல்மெட்டை கட்டாயமாக்கும் முன், சாலைகளை தரம் உயர்த்த வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.  #Helmet
    ×